ஆரணி அருகே உரிய ஆவணம் இல்லாததால், பணம் பறிமுதல்.

74பார்த்தது
ஆரணி அருகே உரிய ஆவணம் இல்லாததால், பணம் பறிமுதல்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணியை அடுத்த எஸ். எல். எஸ். மில் பகுதியில் பறக்கும் படையின் கூட்டுறவு தணிக்கை அலுவலா் சித்ரா தலைமையில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வேலூரிலிருந்து வந்த காரை நிறுத்தி ஆய்வு செய்தனா். சேத்துப்பட்டைச் சோ்ந்த சங்கரன் என்பவா் குடும்பத்துடன் வேலூருக்குச் சென்றுவிட்டு மீண்டும் சேத்துப்பட்டு திரும்புவது தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்த ரூ. ஒரு லட்சத்து 27ஆயிரத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி