உடுமலை மாரியம்மன் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு

77பார்த்தது
உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி நோன்பு சான்றிதழ் இடம் துவங்கிய நிலையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன முதல் நிலையில் மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. வேள்வி வளர்த்தப்பட்டு வேத
மந்திரங்கள் முழங்க பால், சந்தனம், தயிர், மஞ்சள், விபூதி, பழரசம், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு மாரியம்மன் சூலத்தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பச்சைப்பட்டில் மாரியம்மனும் வெள்ளைப்பட்டில் சூலத்தேவரும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மனம் கொள்ளா இந்த காட்சியை காண மணிக்கணக்கில் விழி இமைக்காது காத்திருந்த பொதுமக்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோசத்துடன் மாரியம்மன் அருள் பெற்று பரவசம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அறுசுவை கலந்த திருக்கல்யாண உணவு பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி