உடுமலையில் விஜயகாந்த்க்கு மொட்டை அடித்து அஞ்சலி ஊர்வலம்

1062பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேமுதிக சார்பில் மறைந்த தேமுதிக தலைவரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக ஊர்வலம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் மறைந்த விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேமுதிக தொண்டர்கள்
மொட்டை அடித்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர்
பெரியகோட்டை ஊராட்சி ராஜகாளியம்மன் கோவில் பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் பைபாஸ் ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தில் ஊர்வலம் நிறைவு அடைந்தது. அவைத்தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், துணைச்செயலாளர் கந்தசாமி, சந்திரகாந்தி, நகரச் செயலாளர் ராமச்சந்திரன், நகர அவைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் யூசுப், துணைச் செயலாளர் இப்ராஹிம் தாஜுதீன், உடுமலை ஒன்றிய அவைத் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் தமிழ் மாநில காங்கிரஸ் மதிமுக நாம் தமிழர் கட்சி அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் விடுதலை சிறுத்தைகள் ஐ என் டி யு சி முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :