திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் ஊராட்சி பகுதியில் நேற்று இரவு (அக் -1 )குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். இந்த நிகழ்வில் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.