அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி!

60பார்த்தது
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமை , மத வேறுபாடுகள் ஆகியவற்றை அகற்றி பெண்களை சம நிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை சமூக நீதி நாளாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதியன்று சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக உள்ளதால் அரசின் அறிவுறுத்தலின்படி இன்று உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி ப. விஜயா தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு ஏ. ஜெயராஜ், திருமதி டி. மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழாசிரியர் திரு ஆர் ராஜேந்திரன் உறுதிமொழி வாசிக்க, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவியர்களும், ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் திருமதி வி. விஜயலட்சுமி , திருமதி எஸ். லதா திருமதி ரேவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :