சர்க்கரை ஆலையில் அரவை துவக்க ஆயத்தப் பணிகள் துவக்கம்!!

2310பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளான உடுமலை மடத்துக்குளம் பல்லடம் தாராபுரம் பழனி நெய்க்காரப்பட்டி ஒட்டன்சத்திரம் குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலை அங்கத்தினர்களாக உள்ள 3 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேவையான கரும்பு கிடைக்காதது, வறட்சி, உரிய விலை கிடைக்காதது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரவைக்கு தேவையான கரும்பு கிடைப்பதிலும், பழமையான இயந்திரங்களால் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. கடந்தாண்டு அரவை பருவத்தில் 94, 000 டன் கரும்பு அரவை மேற்கொள்ளப்பட்டு 88 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பால் பிரன்ஸி ராஜ்குமார் கூறியதாவது.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு அரவை ஏப்ரல் இரண்டாவது வாரம் இறுதியில் துவங்க வாய்ப்புள்ளது இதுவரை 2, 300 ஏக்கர் கரும்பு ஒப்பந்தம் நடப்பட்டுள்ளது இது 3 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் 1. 10 லட்சம் முதல் 1. 20 லட்சம் வரை கரும்பு அரவை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது ஆலையில் 10 கோடி ரூபாய் செலவில் இயந்திரங்கள் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது இதனால் நடப்பு சர்க்கரை கட்டுமானமும் சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்

டேக்ஸ் :