திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாகவே கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று(செப்.9) காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்பொழுது திடீரென சாரல் மழை பெய்து வருகிறது. கடுமையான வெப்பத்தால் அவதி அடைந்து வந்த பொதுமக்கள் தற்பொழுது பெய்து வரும் சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.