சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கார்த்திகேயன் என்பவர் வேலை செய்து வருகிறார். அங்கு, அவருக்கு சம்பள பாக்கி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கார்த்திகேயன், நிறுவனத்திற்குள் புர்கா அணிந்து ரூ.1.43 லட்சத்தைத் திருடியுள்ளார். பின்னர், புர்கா அணிந்தபடியே வீடு திரும்பியுள்ளார். அப்போது, அங்கிருந்து போலீசார் பெண் என நினைத்து அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, கார்த்திகேயன் தவறுதலாக ஆண் குரலில் பேசியதால் போலீசில் சிக்கினார்.