மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று (அக்.29) முதல் அமலுக்கு வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. மூத்த குடிமக்களின் குடும்ப ஆண்டு வருமானத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற வகையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் விரிவாக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதாரத்துறை திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.