திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் கோவை திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு ஆலோசனைக் கூட்டம் கோவை திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் தம்பு தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கலந்துகொண்டார். கோமங்கலம் பகுதியில் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலை செல்லும் நிலையில் டோல்கேட் அமைக்க கூடாது.
மீறினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினார். நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் ஈரோடு ஜெயராமன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆவல் காளிமுத்து, கோவை திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் தேவராஜ், கோவை மாவட்டத் தலைவர் கோவை குமார், திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் குப்புசாமி, திருப்பூர் மாவட்டம் மகளிர் அணிச் செயலாளர் சாந்தி, கோவை மாவட்டம் மகளிர் அணிச் செயலாளர் செண்பகம், கோவை மாவட்டச் செய்தித் தொடர்பாளர் காளிமுத்து, திருப்பூர் மாவட்டப் பொருளாளர் வலுப்புரான், வால்பாறை தோட்டத் தொழிலாளர் சங்கச் செயலாளர் அம்பேத்கர் ரவி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத் தலைவர் நாகராஜ் மாணிக்கம் மற்றும் கோவை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.