கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்துப் பேசிக்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் முந்தைய பிரதமரான ட்ரூடோ ஆட்சியில் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இந்தியாவை தொடர்புப்படுத்த கனடா அரசு முயன்றதால் இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு பாதிக்கப்பட்டது.