பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் ரவ்ஜோத் சிங்கின் ஆபாச புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஷிரோமணி அகாலிதள தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா தனது தள பக்கத்தில், "selfie scandal" என்ற தலைப்பில் ரவ்ஜோத் சிங் ஒரு பெண்ணுடன் அரை நிர்வாணமாக உள்ள ஆபாச புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும், இதன் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ரவ்ஜோத் சிங் மறுத்துள்ளார்.