உத்தராகண்ட்: கேதார்நாத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத் தாம் மலையேற்றப் பாதையில் ஜங்கல்சட்டி காட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.