சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு விதித்துள்ள நிபந்தனைகள் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஊழியர்கள் வேலையில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக, பணி நேரத்தில் சிற்றுண்டி சாப்பிடக்கூடாது, 10 முறைக்கு மேல் கழிவறையை பயன்படுத்தக் கூடாது, அடிக்கடி கண்ணாடி பார்க்கக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இது ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.