கபினி அணையிலிருந்து 25,000 கன அடி தண்ணீர் திறப்பு

78பார்த்தது
கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், அங்குள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. 84 அடி கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 81 அடியை நெருங்கியுள்ளது. இதனால் அணையிலிருந்து 25,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது விரைவில் தமிழகத்தின் பிலிகுண்டுலுவை வந்தடையும். இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி