திருப்பூர்: தாயை குத்திக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

1548பார்த்தது
திருப்பூர்: தாயை குத்திக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகு ஹர்சித். தியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி(வயது 47). இவருடைய மகன் ஹர்சித் (27). இவர் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 9-9-2019 அன்று வீட்டில் இருந்த ஹர்சித் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் கொடுக்குமாறு தகராறு செய்துள்ளார். பணம் இல்லை என்று அவர் மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ஹர்சித் வீட்டில் இருந்த கத்தியால் தனது தாயாரை துரத்திச்சென்று சரமாரியாக குத்தினார். இதில் ஆரோக்கியமேரி இறந்தார்.

இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர் சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர் பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன் றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பாலு நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் தாயை கொலை செய்த குற்றத்துக்காக ஹர் சித்துக்கு ஆயுள் தண்டனை, ரூ. 2, 500 அபராதம் விதித்து தீர்ப் பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி