பருவமழை காரணமாக திருப்பூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திருப்பூரில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெ டுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற் குள்ளாகினர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள் மழை காரண மாக அவதிப்பட்டனர். தீபாவளி பண்டிகை வியாபாரத்தை எதிர்பார்த்து சாலையோரங்களில் கடை அமைத்திருந்த வியா பாரிகளும் மழையால் வியாபாரம் பாதித்ததால் சிரமத்திற்குள் ளாகினர்.