சீனப் பெயர் வைப்பது குறித்து பேச திராணி இருக்கிறதா

84பார்த்தது
திருப்பூர் ராயபுரம் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் தமிழ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்ட சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் நடைபெற இருக்கின்ற தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்குமான தேர்தல் எனவும் சிபிஐ மூலம் மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்ற கட்சி பாஜக எனவும் குற்றம் சாற்றினார். ராமர் , இந்து என பேசும் பாஜக இந்து மக்களையும் ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்றால் செய்ய உள்ள வாக்குறுதிகள் குறித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளை விட மாட்டோம் என்றார். ஆனால் பாஜகவில் இணைந்தவர்கள் குற்ற வழக்குகள் முடித்துவைக்கபடுள்ளது. சிபிஐ, அலமக்கதுறை வைத்து மிரட்டி தங்கள் கட்சிக்கு இழுக்கிறார்கள். தொழில்துறையினர் அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நன்கொடை வாங்குகிறார்கள். தமிழகத்தில் வாக்கு கேட்கிறார் மோடி. தமிழ்நாட்டிற்கு இதுவரை என்ன செய்திருக்கிறார். திருப்பூர் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி