திருப்பூர்: ஊருக்குள் பேருந்து வர வேண்டுமென கோரிக்கை!

3990பார்த்தது
திருப்பூர்: ஊருக்குள் பேருந்து வர வேண்டுமென கோரிக்கை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை - கணியூர், காரத்தொழுவு கிராமம் வரை இயக்கப்படும் 29 ஆம் நம்பர் பேருந்து சமீப காலமாக காரத்தொழுவு கிராமத்திற்குள் வந்து செல்வது இல்லை. உடுமலை அரசுப் பேருந்து டிப்போ மேலாளரிடம் இது சம்பந்தமாக போனில் புகார் அளித்த சிறிது நேரத்தில் 29ஆம் நம்பர் பேருந்தின் நடத்துனர் ஜாபர் அலி என்பவர் புகார் கொடுத்தவரிடம் பேசியுள்ளார்.

காரத்தொழுவு ஊருக்குள் சென்று வர வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் அதே பேருந்தில் ஓட்டுனராக உள்ள ஜோத்தம்பட்டியை சேர்ந்த தண்டபாணி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரிய தகவலில் காரத்தொழுவு கிராமத்திற்கு சென்று வர வேண்டியதில்லை என பதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக உடுமலை அரசு பேருந்து டிப்போ அலுவலரிடம் போன் செய்து கேட்டபோது அப்படி எந்த சட்டமும் இல்லை என்பதாக தெரிவித்தார்.

பயணிகளை அலட்சியமாக கருதி உரிய நேரத்தில் உரிய இடத்தில் பயணிகளை ஏற்றிச் சென்று, இறக்கி விடுவது சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஊழியர்களின் கடமை.! கடமையை செய்ய தவறியவர்கள் மீது எப்போது நடவடிக்கை? எத்தனை பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் மேலும் பேருந்து ஊருக்குள் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி