திருப்பூர்: கமிஷன் தராததால் காண்ட்ராக்டரை அடித்த பாய்ந்த திமுக கவுன்சிலர்!

577பார்த்தது
திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட பாப்பண்ணன் நகர் நான்காவது விதி உட்பட நான்கு வீதிகளில்
ரூ. 68 லட்சம் மதிப்பில் சிறப்பு நிதி மூலம் சாலை அமைக்கும் பணி தூங்கியது. இந்த சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் வேலுச்சாமி எடுத்து நான்கு வீதிகளில் தார் சாலை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டார்.

பாப்பண்ணன் நகர் கடைசி பகுதியில் சாக்கடை கால்வாய் உடைந்து உள்ள இடத்தில் அதனை சரி செய்த பின்பு சாலை பணியை மேற்கொள்ள அறிவுறுத்தாமல் அதற்கு பதிலாக திமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் தாமோதரன், வேலுச்சாமியை தகாத வார்த்தையால் திட்டியும் கற்களை கொண்டு அடிக்க பாய்ந்தும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஒப்பந்ததாரர் வேலுச்சாமி உடனடியாக வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

இந்த சாலை பணி துவங்குவதற்கு முன்பாக திமுகவை சேர்ந்த கவுன்சிலர் தாமோதரன் தன்னிடம் இரண்டு சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என கேட்டதாகவும், அதற்கு தார் சாலையை தரமாக அமைத்து தருகிறேன். கமிஷன் தர இயலாது என வேலுச்சாமி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவை சேர்ந்த கவுன்சிலர் அந்தக் காழ்புணர்ச்சி காரணமாக தனக்கு தொந்தரவு செய்ய வேண்டும் என்று நோக்கில் தன்னை தாக்க முற்பட்டதாக ஒப்பந்ததாரர் வேலுச்சாமி வேதனையோடு குற்றம்சாட்டினார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Job Suitcase

Jobs near you