12, 728 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

578பார்த்தது
12, 728 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
இரண்டாம் கட்டமாக சுழற்சி முறையில்

12, 728 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு



திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 540 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள் ளன. திருப்பூர், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு நாடா ளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் இவையாகும்.

தேர்தல் பணிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி முதல்கட்டமாக கடந்த மாதம் 21-ந் தேதி நடைபெற்றது. இந்தநிலையில் இரண்டாம் கட்டமாக 12 ஆயிரத்து 728 வாக்குச்சாவடி அலுவ லர்கள் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக் டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இதில் மாநகராட்சி ஆணை யாளர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெய ராமன், தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி