பீகார் மாநிலம் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாதியா இவரது மனைவி ஷீலா 30 வயதாகிறது இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் பிழைப்பு தேடி தமிழகம் வந்தவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து ஒரு பனியன் கம்பெனியிலும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையின்போது தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது. அதனால் மிதுன் தாதியா கோபித்து கொண்டு, குழந்தைகள் 3 பேரையும் கூப்பிட்டுக் கொண்டு பீகாருக்கு சென்றுவிட்டார். ஆனால் ஷீலா தேவி மட்டும் திருப்பூர் வீட்டிலேயே தனியாக குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இவரது வீட்டு கதவு திறக்காமலேயே இருந்தது. அதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். அப்போதுதான் வீட்டுக்குள் ஷீலா தேவி பிணமாக விழுந்து கிடந்தார். இதை பார்த்து அலறிய அவர்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் சொன்னார்கள் விரைந்து வந்த அவர்கள் ஷீலா தேவியின் உடலை கைப்பற்றினர். ஷீலா கழுத்தில் காயம் இருந்தது. அதனால் கழுத்தை நெரித்துதான் இவரை கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர் பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
30 வயது ஷீலா தேவிக்கும், 14 வயது சிறுவனுக்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த சிறுவனும் பீகாரை சேர்ந்தவனாம். கொங்குநகரில் தங்கி இருந்து பனியன் கம்பெனியிலேயே வேலை செய்யும்போதுதான் இந்த கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம் உல்லாசமாக இருக்க ஷீலாதேவியை சிறுவன் அழைத்துள்ளான். ஆனால் ஷீலாதேவி மறுப்பு சொல்லவும் சிறுவனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அதனால்தான் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் தந்துள்ளான். இப்போது சிறுவனை கைது செய்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.