உடுமலை: தக்காளி விவசாயிகள் வலியுறுத்தல்

4427பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்சமயம் தக்காளி விலை தொடர்ந்து இறங்கு முகமாக இருப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்த. ற்சமயம் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ 80 முதல் ரூ 150 வரை விற்பனை ஆகி வருகின்றது. எனவே குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தக்காளி பழங்களை எடுத்து வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.