தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம்

556பார்த்தது
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மடத்துக்குளம் வட்டாரக் கிளையின் சார்பாக 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பாக இன்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் திருமதி ரா. ஈஸ்வரி தலைமை தாங்கினார். முன்னாள் பொறுப்பாளர்கள் திரு. சு. கனகசபாவதி திரு. சையது முகமது இத்ரீஸ் திரு. மு. கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் திரு. ச. சரவணகுமார் மற்றும் மாவட்டத் தலைவர் நா. நல்லழகு ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரை ஆற்றினர். இறுதியாக வட்டார பொருளாளர் திரு சா. ரஃபிஅகமத் நன்றியுரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி