தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

1060பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேக்கரி அருகில் மீண்டும் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே வாகன ஓட்டிகள் இவ் வழியாக செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் இருந்தும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பகுதியில் இதுபோன்று மழைநீர் தேங்கவது, ஆபத்தை விளைவிக்கும் எனவும், பெரும் விபத்து ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி