திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி காரத்தொழுவு ஊராட்சியில் நம்மாழ்வார் அவர்களின் 10-வது நினைவு நாளை முன்னிட்டு மடத்துக்குளம் கிழக்கு தொகுதி தலைவர் விஜயகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமார் அவர்கள் கொடியேற்றி வைத்தார். இயற்கை வேளாண் விவசாயிகள் துங்காவி மாரிமுத்து, காரத்தொழுவு உதயகுமார், தளி சரவணக்குமார் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் பாலமுருகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.