குமணன் வரலாற்றை ஆவணப்படுத்தும் வரலாற்று ஆய்வு நடுவத்தினர்

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் கொழுமம், மற்றும் சங்கராமநல்லூர் பேருராட்சிக்குட்பட்ட பகுதிகள், கொழுமம் வனச்சரகத்திற்குட்பட்ட முதிரை மலைப்பகுதிகள், குமணன் ஆட்சி செய்த பகுதிகளாக சங்க இலக்கியப்பாடல்கள் சான்று கூறுகின்றன. இந்த சங்க இலக்கியப்பாடல்கள், முதிரை மலை இவையனைத்தும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் பார்வையிட்டு ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஆவணப்படுத்தும் பணிகளை ஏற்கனவே தொடங்கியிருந்தாலும் தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் மூர்த்தீஸ்வரி முதிரை மலைப் பகுதிகளை நேரடி கள ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார். இவருடன் வனச்சரக அலுவலர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் வி. கே. சிவகுமார். அருட்செல்வன் ஆகியோரம் களப்பயணத்தில் உதவியாக இருந்தனர்.
Job Suitcase

Jobs near you