வெள்ளகோவிலில் ரூ. 19. 38 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

573பார்த்தது
வெள்ளகோவிலில் ரூ. 19. 38 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் வெள்ளக்கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏழத்தில் 67 விவசாயிகள் 558 முட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் நல்ல தரமான தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 84. 35 பைசா விற்கும் இரண்டாம் தரமான தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ. 58க்கும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ. 19 லட்சத்து 38 ஆயிரத்து 580 க்கு விற்பனை நடைபெற்றது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி