காங்கேயம்: 17 வருடங்களாக இலவச பட்டா நிலத்தை அளந்து கொடுக்காத அதிகாரிகள்

62பார்த்தது
காங்கேயம் ஊதியூரை அடுத்த நிழலி கிராமத்தில் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு சுமார் 53 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டுமனை பட்டாக்களுக்கு உரிய நிலத்தை அளவீடு செய்யாமல் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட முறை காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம், தாராபுரம் துணை ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று (நவம்பர் 20) காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் சிறிது நேரம் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்திற்கு ரீ-சர்வே பட்டாவும் தற்போதைய அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட பட்டாவுக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியிலாவது விடிவு காலம் பிறக்குமா? எங்களுக்கு வழங்கப்பட்ட இடம் அளவீடு செய்து கொடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி