வெள்ளகோவில் கடந்தாண்டு மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

84பார்த்தது
வெள்ளகோவில் கடந்தாண்டு மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
வெள்ளகோவில் மு. பழனிச்சாமி நகரைச் சேர்ந்த பூரணம் விஸ்வநாதன். மனைவி காந்திமதி வயது 68. இவர் கடந்த ஆண்டு 05. 06. 2023 அன்று சக்தி நகரில் உள்ள தையல் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆசாமி காந்திமதி அணிந்து இருந்த 6 பவுன் மதிப்புள்ள இரண்டு நகைகளை பறித்து சென்று விட்டார். இது குறித்து வெள்ளகோயில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நகை பறிப்பில் ஈடுபட்டவர் ஊத்துக்குளி ஆர். எஸ் பகுதியைச் சேர்ந்த சேட் ரூபை தீன் என்கிற சேட் பாய் 44 என தெரியவந்தது. இதை அடுத்து நேற்று வெள்ளகோயில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாசம் தலைமையிலான தனிப்படையினர் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்த சேட் ரூபை தீனை கைது செய்தனர். இவர் அவ்வப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் திருட்டு நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. பின்னர் நேற்று மாலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி