செவித்திறன் குறைபாடு பரிசோதனைக்கு நாளை முன்பதிவு

71பார்த்தது
காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில்  முதலமைச்சரின் விரிவான மருத்தவ காப்பீடு திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச ஆடியோகிராம்  பரிசோதனை கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இந்த பரிசோதனையில்  
குறைபாடு உள்ளவர்களுக்குஅதற்குண்டான செவிப்புலன் உதவி சாதனம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.  இதுவரை சுமார் 40 நபர்கள் இந்த செவிப்புலன் உதவி 
சாதனம் இலவசமாக பெற்று பயனடைந்துள்ளனர். மேலும் இந்த பரிசோதனை இனி 
வரும் மாதங்கள் தோறும் தொடர்ந்து நடைபெறும் எனவும், இதற்கான 
முன்பதிவு நாளை நடைபெற உள்ளது.

முன்பதிவு  காலை 9. 30 முதல் மதியம் 12 மணி வரை செய்யப்படும் எனவும்,  உரிய காப்பீடு திட்டம் இல்லாதவர்கள்  அரசு வழங்கும் புதிய சாதனம் பெற இயலாது எனவும் புதிதாக பதிவு செய்ய வருபவர்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நாட்களில் முன்னுரிமை அடிப்படையில் முன்பதிவு செய்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கபட்டு பரிசோதனை செய்யும் தேதி அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக ஓரிரு நாட்களுக்கு முன்னரே தெரியப்படுத்தப்படும் எனவும் அதன் அடிப்படையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்‌ எனவும்,  மேலும் 
குறைபாடு உள்ளவர்கள் 
முன்பதிவு செய்ய புதிய 
ரேஷன் கார்டு,  ஆதார் அட்டை,  முதலமைச்சர் காப்பீட்டு அட்டை ஆகியவற்றை கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என காங்கேயம் அரசு மருத்துவமனை மருத்துவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.