காங்கேயம் திருப்பூர் சாலையில் சிவன்மலை அருகே நீலக்காட்டு புதூரில் சாலையோரமாக சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று அழுகை நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த பகுதி பொது மக்கள் உடனடியாக காங்கேயம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பார்த்தபோது இறந்தவர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு இருந்திருக்கலாம் எனவும், முகம் அழுகியநிலையில் இருந்ததால் அடையாளத்தை கண்டறிய முடிய வில்லை என்பதால் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் மூன்று நாட்களும் முன்பு ஆதரவற்ற நிலையில் அவர் சுற்றித்திரிந்தார் எனவும் பொதுமக்கள் தெரிவித்த நிலையில் பல்வேறு கோணங்களில் காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.