திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெறய் விற்பனை செய்யக்கோரி இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சங்கரண்டாம்பாளையம் கிராமம் கருங்காலிவலசு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நின்று கொண்டு கையில் கருப்பு கொடி ஏந்தியும் தென்ன வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இயற்கை விவசாய அணி துணைச் செயலாளர் சங்கரன்பாளையம் தனபாலன், தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன். முன்னிலை வைத்தார்.