திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் ராமசாமி (49). இவரது மனைவி லட்சுமி வயது 43. இவர்கள் தேர்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். ராமசாமி என்பவர் கடந்த 18 மாதங்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு கோவை மற்றும் தாராபுரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அருகில் உள்ள கிணற்றில் குறித்து நேற்று முந்தினம் தற்கொலை செய்து கொண்டார்.