உடுமலை -மூணாறு சாலையில் செல்வதில் கட்டுப்பாடு

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு மாநில நெடுஞ்சாலையில் சின்னார் வனவிலங்கு பாதுகாப்பு மையப் பகுதியில் 9/6 சோதனை சாவடி முதல் சின்னார் சோதனை சாவடி வரையுள்ள பகுதிகளில் சாலை பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளதால் நாளை 27.2.2025 வியாழக்கிழமை முதல் சாலை போக்குவரத்தில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே வாகனங்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படும். இருபது நாட்கள் இந்த பகுதியில் சாலை பணிகள் நடைபெறுவதால் இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்று சின்னார் வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி