திருப்பூரில் நடிகை நமீதா தீவிர பிரச்சாரம் - வீடியோ

4211பார்த்தது
திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குச் சென்று மத்திய அரசின் திட்டங்களால் பயன் அடைந்த பயனாளிகளை சந்தித்து எல். முருகனுக்கு ஆதரவாக நடிகையும், பாஜக பேச்சாளருமான நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் வீட்டிற்குச் சென்ற அவர் வீட்டில் உள்ள வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாஎன்பது குறித்துகேட்டு அறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகளை யாராலும் மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்திய முழுவதும் வீடு கொடுத்துள்ளது. வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. திமுக 243 தொகுதிகளில் மரத்தலை சந்தித்து அவர்களை தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். திமுக மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் அவர்கள் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி