நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் 3 பேர் உயிர் தப்பினர்

577பார்த்தது
நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் 3 பேர் உயிர் தப்பினர்
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி. கால்நடை மருத்துவ பேராசிரியர். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள தாயார் வீட்டுக்கு காரில் சென்று உள்ளனர். அங்கு உறவினர்களை பார்த்த பின்பு சரவணம்பட்டிக்கு காரில் திரும்பி வந்தனர். இவருடைய கார் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது காரின் முன்பக்க பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை தொடர்ந்து காரில் வந்தவர்கள் காரிலி ருந்து இறங்கினார். இதனையடுத்து கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சிய ளித்தது. மேலும் வேகமாக பரவிய தீயின் காரணமாக கார் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஊத்துக்குளி தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றி லும் எரிந்து சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி