திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில்
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது மறைந்த நடிகரும், தே. மு. தி. க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்தை நினைவுகூர்ந்து பேசினார். இதுதொடர்பாக
பிரதமர் மோடி பேசுகையில், "
விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர்
விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார். " என்று கூறினார்.