திருச்சி அதிமுக இளைஞர் பாசறை கூட்டம்

72பார்த்தது
திருச்சி அதிமுக இளைஞர் பாசறை கூட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட அ. தி. மு. க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பாசறை என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதற்கு மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் இலியாஸ் தலைமை தாங்கினார்.
இதில் மாநில இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், திருச்சி மாநகர மாவட்ட அ. தி. மு. க. செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை பொறுப்பாளர்களுக்கு தேர்தலைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 25 பேரை தேர்வு செய்து இளைஞர்-இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற பாடுபடவேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி