போக்குவரத்துக் கழக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

5078பார்த்தது
போக்குவரத்துக் கழக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
திருச்சி பீமநகர் தேவர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் ( 65 ). ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர். இவருக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகளை நினைத்து மன அழுத்தத்தில் பன்னீர்செல்வம் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி