ஸ்ரீரங்கம் தெப்ப திருவிழா இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது

74பார்த்தது
ஸ்ரீரங்கம் தெப்ப திருவிழா இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது
திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா நாளை(12ந்தேதி) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்
திருவிழாவையொட்டி இன்று காலை 10 மணியளவில் மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது முன்னதாக, முகூர்த்தகாலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தகாலை கோவில் இணைஆணையர் மாரியப்பன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நட்டனர்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நாளை (12ந்தேதி) மாலை 6. 30 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், 13-ந்தேதி மாலை ஹனுமந்த வாகனத்திலும், 14-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 15-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 16-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 17-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் சுவாமி வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7ம்நாளான 18-ந்தேதி மாலை 6. 30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8ம்நாளான 19-ந்தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி