திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ. 5. 82 கோடி பறிமுதல்

77பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ. 5. 82 கோடி பறிமுதல்
திருச்சி எட்டரைப் பகுதியில் நடந்த வாகனச் சோதனையின்போது ஒரு காரில் இருந்து ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 10 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாகப் கைப்பற்றப்படும் பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி எட்டரையில் பறிமுதல் செய்த ரூ. 1 கோடியும் வருமானவரித் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்துக்குச் சொந்தமானவர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. அதற்கான அறிக்கை வந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
மாவட்டத்தில் இதுவரை ரூ. 5. 82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ளதால் சோதனையை மேலும் தீவிரப்படுத்தி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
.

தொடர்புடைய செய்தி