காவிரி ஆற்றில் நூறுசதவீதம் வாக்குப்பதிவிற்கு மணல் சிற்பம்

576பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், திருச்சி மாவட்ட நிர்வாகத்தால் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருச்சி தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் இன்றையதினம் திருச்சி காவிரி ஆற்றில் தேர்தல் வாக்குப்பதிவு விரல் சின்னம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் ஆகியவற்றை மணல் சிற்பங்களாக அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதீப்குமார் முன்னிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஜனநாயக கடமை என நிறைவேற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டதுடன் தேர்தல் வாக்குப்பதிவு குறித்த பாடல்களுக்கு நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி