ஜோசப் கண் மருத்துவமனையில் காண்டூரா லேசிக் சிகிச்சை அறிமுகம்

53பார்த்தது
ஜோசப் கண் மருத்துவமனையில் காண்டூரா லேசிக் சிகிச்சை அறிமுகம்
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் பார்வைக் குறைபாடுகளை நுட்பமாகக் கையாளும் விதத்தில் காண்டூரா லேசிக் எனும் நவீன தொழில்நுட்பச் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனையின் இயக்குநர் எம். பிரதீபா, துணை இயக்குநர் அகிலன் அருண்குமார் ஆகியோர் கூறியது: திருச்சியில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஜோசப் கண் மருத்துவமனை தற்போது பார்வைக் குறைபாடுகளை நுட்பமாகக் கையாளும் விதத்தில் காண்டூரா லேசிக் என்னும் அட்வான்ஸ்டு டெக்னாலஜியை திருச்சியில் முதல்முறையாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கிட்டப்பார்வை, தூரப்பார்வை பாதிப்பு அதிகமாக உள்ளது. இதைச் சரிசெய்ய கண்ணாடிகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், சிலருக்கு அதனால் கண்சோர்வு, தலைவலி ஏற்படுகிறது. இன்னும் சிலரோ கண்ணாடி அணிவதைஅசௌகரியமாக உணர்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் இந்த காண்டூரா லேசிக் டெக்னாலஜி அமையும். காண்டூரா அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலம் கண் பார்வைத் திறனை அதிகப்படுத்த முடியும். இனி வாழ்நாளில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது என்றனர். பேட்டியின்போது லேசிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் அக்ஷயா, மருத்துவர் பிரியா, நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி