திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா

71பார்த்தது
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா
கலைஞர் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம், மாநகர வர்த்தக அணி சார்பாக கல்வியாளர்கள் பங்கேற்கும் சொல்லரங்கம் நிகழ்ச்சி திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலாஜி வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் செந்தமிழ் செல்வன், மாநகர அமைப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்த மேலும் மாவ்ட அணித்தலைவர், துணை அமைப்பாளர்கள், மாநகர அணி துணைத்தலைவர், துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இந்த சொல்லரங்கம் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
மாநில வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம்,
விஞ்ஞானியும், டெக்னிக்கல் அட்வைசருமான டாக்டர் பொன்ராஜ்,
மாநகர கழக செயலாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்… கலைஞரின் நுற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில் ஓராண்டில் 100 நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்ற முனைப்புடன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you