நாகலாபுரம்--பறக்கும் படையினரிடம் சிக்கிய 99 ஆயிரம் ரொக்கம்

1039பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் சோதனை சாவடியில் நேற்று நள்ளிரவு பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றினை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் அவர் சிங்களாந்தபுரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (30) என்பதும், அவர் விழுப்புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது பையினை சோதனை செய்ததில், அதனுள் உரிய ஆவணங்களின்றி ரூபாய் 99, 200 பணத்தினை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனை எடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி