மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் ராஜலட்சுமி தம்பதியினர் இவர்களுடைய 17 வயது மகள் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து தாய் ராஜலட்சுமி மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.