பி. மேட்டூரில் மக்களுடன் முதல்வர் நிகழ்வு

1546பார்த்தது
பி. மேட்டூரில் மக்களுடன் முதல்வர் நிகழ்வு
துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பி. மேட்டூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சியை திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் முசிறி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய காடுவெட்டி தியாகராஜன் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர் பெறப்பட்ட மனுக்களுக்கு 10 நாட்களில் தீர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி