சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலில் குறைவான இடவசதி

84பார்த்தது
சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலில் குறைவான இடவசதி
சாதாரண 12 ஐசிஎப் பெட்டிகளைக் கொண்ட ரயில்களாக இயக்கப்பட்ட மேற்கண்ட ரயில்களை ரயில்வே நிா்வாகம், தற்போது மெமு ரயிலாக மாற்றிய நிலையில், 4 பெட்டிகளை குறைத்து 8 பெட்டிகளாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

முன்பதிவில்லாத இந்த ரயிலில் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் நாள்தோறும் பயணித்து வருகின்றனா்.

திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி ரயில் சேவை சேலம் வரை நீட்டிக்கப்பட்டதால், பயண நேரமும், செலவும் மிச்சமாகும் என முதலில் சந்தோஷப்பட்ட பயணிகள், தற்போது இந்த நீட்டிப்புக்காக வருத்தத்திலும், ரயில்வே துறை மீது கடும் அதிருப்தியிலும் உள்ளனா்.

சுமாா் 282 கி. மீ. தூரம் பயணிக்கும் மயிலாடுதுறை - சேலம் மெமு ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. கரூா், திருச்சி, தஞ்சாவூரில் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் ஏறி, இறங்கும். பெட்டிகள் குறைவாக இருப்பதால், இந்த ரயிலில் உட்கார போதிய இடவசதியில்லாமல், பலா் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பயணிக்க வேண்டியுள்ளது.
12 பெட்டிகள் கொண்ட ஐசிஎப் ரயிலாக ஓடிய போது, ஒரு பெட்டிக்கு 2 வீதம் இணைக்கப்பட்ட இரண்டு பெட்டிகளில் 4 கழிவறைகள் இருக்கும். ஆனால் மெமு ரயிலில் இரண்டு பெட்டிகளுக்கு ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. அதுவும் அதிகளவிலான பயணிகளின் உபயோகத்தால் கடும் துா்நாற்றம் வீசுகிறது.
Job Suitcase

Jobs near you