திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கிராமிய கமிட்டி மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மனு அளித்தனர். ஏற்கனவே மாட்டுப்பொங்கல் தினத்தன்று பாரம்பரியமாக நடைபெற்று வரும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கேட்டு ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் மனு அளித்துள்ள நிலையில், தற்போது கூத்தைப்பார் கிராமத்தினரும் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு மனு அளித்துள்ளனர். இதனால் திருவெறும்பூர் பகுதியில் இரண்டு கிராமங்களில் வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு திருச்சி கலெக்டரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.